அறம் – முகிழ் சிறார் குழு

 


அறிமுகம்


கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் வாசிப்பை வெளிக்கொண்டுவரும் நோக்கத்தோடு, தோழர் சுகன்யா அவர்கள் மேற்கொண்ட கதை சொல்லல் பயணத்தில் முகிழ்ந்த முகிழ் சிறார் குழு, தோழகள் சுகன்யா மற்றும் சண்முகலட்சுமிஆகியோரின் ஒருங்கிணைப்பில்,ஊடகவியலாளர் தோழர் அ.குமரேசன்மற்றும் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் வழிகாட்டுதலோடு சிறார்களை வாசிப்பை நோக்கி பயணிக்க வைத்தது.

முதலில் வாட்ஸ்அப்பில் துவங்கபபட்ட குழு, குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால்,தமுஎகச அறம் கிளைநிர்வாகக்குழுவின் வழிகாட்டுதலோடு மார்ச் 2021 இல் டெலக்ராம் குழுவாக உருமாறியது. கடந்த ஆறு வருடங்களில் வெவ்வேறு ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து குழு தனது தொடர் செயல்பாடுகளை செய்து வருகிறது.

வாசிப்பாளர்களாக இருந்த குழந்தைகள், இணையவழி நிகழ்வுகளை தொகுத்து பல்வேறு வகைமைகளில் பங்கேற்று தங்கள் வாசிப்பு மற்றும் தனித் திறன்களை மேம்படுத்தும் தளமாக இருந்து வருகிறது. ஓவியப் போட்டிகள், இணையவழி கதை உருவாக்கப் பயிற்சிகள், நூல் வெளியீடுகளைக் கண்டுள்ள முகிழ் குழு தற்பொழுது மீண்டும் வாட்ஸ்அப் குழுவாக இயங்கி வருகிறது.

மேலும் தொடர கிளிக் செய்யவும்