பரவலான
வாசகர் கவனம் பெற்ற இதழாக சிறுகதை உள்ளது. ஒவ்வொரு இதழும்
குறைந்தபட்சம் முந்நூறு சந்தாக்களோடு வெளிவருகின்றன. இதுவரை 21 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஐந்து
வருடங்களை கடந்து தற்பொழுது சிறுகதை இதழ் ஆறாவது வருடத்தில் பயணித்து வருகிறது.
அனைத்து
சந்தாதாரர்களுக்கும் சரியான நேரத்தில் இதழ் கிடைப்பதற்காக குரியரில் அனுப்புவது மற்றும்
எழுத்தாளர்களுக்கு சிறப்பு செய்யும் விதத்தில் குறைந்தபட்சம் மதிப்பூதியம்
வழங்குவது போன்ற நிர்வாக நடைமுறைகளை அறம் கிளைத் தோழர்கள் சிறப்பாகச் செய்து
வருகிறார்கள்.
தோழர்கள்
அ.உமர் பாரூக், அ.லட்சுமிகாந்தன். சி.பேரின்பராஜன்
ஆகியோர் நிர்வாகக் குழுவாகவும். தோழர்கள் உதயசங்கர் மற்றும்ம.மணிமாறன் ஆகியோர் ஆசிரியர்
குழுவினராகவும் இருந்து "சிறுகதை" இதழை வெளியிட்டுவருகின்றனர்.
2021ஆம்
ஆண்டிற்கான பாராட்டுச் சான்றிதழை தக்கலை இலக்கிய வட்டம் நமது இதழுக்கு
வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான 450 பிரதிகளுக்கான நூலக ஆணையும் கிடைத்துள்ளது. புதிய நூலக ஆணைக்குழுவினாலும் 'சிறுகதை இதழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அறம் கிளை தோழர்களின் சிறுகதைகளும் இதழில் பிரசுரம் ஆகியுள்ளன.
புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் அறமனச்செம்மல் சீனு.
சின்னப்பா இலக்கிய விருதுகள் 2026 இல் “சிறந்த சிற்றிதழ்”விருதினை பெற்றுள்ளது.