சிறுகதை காலாண்டிதழ்
தமிழ் இலக்கிய உலகில் கவிதைக்கும், ஹைக்கூவிற்கும் தனி இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிறுகதைகளுக்கென்று துவங்கப்பட்ட இதழ் “சிறுகதை காலாண்டிதழ்”. சிறுகதைகள் மட்டுமின்றி சிறுகதை குறித்த ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதை தொகுப்புகள் குறித்த திறனாய்வுகள், சிறுகதையாளர்களின் நேர்காணல், மொழிபெயர்ப்புக் கதைகள்.எனவிரிவான திட்டங்களோடு “சிறுகதை” இதழ் துவங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இதழும் நூல் போன்ற வடிவமைப்பில் நூறு பக்கங்களுடன் வெளிவருகிறது."சிறுகதை" காலாண்டிதழ். . .
தமிழ்ச் சூழலில் ஒரு இலக்கிய இதழினை தொடர்ந்து வெளிக்கொண்டுவருவது சவாலான, சிக்கலான விஷயம். நமது அறம் கிளையின் பல புதிய முன்னெடுப்புகளில் மிக முக்கியமான முயற்சி இது. இதுவரை நமக்குத் தேவையான, பயிற்சிக்காக நாம் பயன்படுத்திக் கொள்வதற்காகவே பல முயற்சிகளைச் செய்தோம். இது இலக்கிய உலகத்திற்கான முயற்சி. இலக்கியத் தரமான எழுத்துகளை ஒரே இடத்தில் வாசிப்பதற்கும், எழுத்துமுறையின் பல பரிமாணங்களை அறிந்து கொள்வதற்கும் “சிறுகதை” இதழ் நமக்குப் பயன்படும்.
முதல் இதழினை தோழர்களுக்கு அறிமுகம் செய்யும் விதத்தில் அகவிழி வாசிப்பு இயக்கத்தில் இணைக்கப்பட்டது. அறம் கிளை எல்லா பணிகளிலும் முன்மாதிரியாய் இருப்பது போலவே, சிறுகதை சந்தா சேகரிப்பிலும் சிறப்பாய் பணியாற்றி வருகிறது.
